Monday, May 31, 2010

ஜப்பானிய பயிரோவியங்கள்








என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்குள் புதிய சிந்தனையும் சாதனை செய்யும் மனப்பான்மையும் வேரோடி கிடக்கிறது.


விவசாயிகள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் அரிசி, கோதுமை,கரும்பு பயிரிட்டு மூன்று போகம் விளைவித்து காடடாது வேளான்மையையும் சுற்றுலாத்துறைக்கான ஸ்தலமாக மாற்றுகிறார்கள் என்பதில் விஜப்பில்லை. நாங்களும் வித்தியாசமாக ஏதாவது சாதிப்போம் என்று ஜப்பானில் உள்ள இனகாடேட் கிராம மக்களின் ஆற்றல் அனுபவம், என்பன அவர்களது வயல் நிலங்களில் படம் போட்டு காட்டுகின்றன.

சுமார் 2500 ஏக்கர் நிலத்தில், வெவ்வேறு நிறங்களில் நெல் பயிரிட்டு அதில் பல்வேறு உருவங்களை வரவழைக்கத் தொடங்கினர். இது ஆரம்பிக்கப்பட்டது 1993 இல் இந்த பயிரோவியங்களில் நெப்போலியன், இவாகி மலை, பாரம்பரிய ஜப்பானியர், சுனாமி அலை என பயிர் உருவங்கள் பல பிம்பங்கள் காட்டுகின்றன.

2000ஆம் ஆண்டில், ஜப்பானின் புகழ்பெற்ற மரச்சிற்பியான ஷராக்கு உள்ளிட்ட கலைஞர்களின் அரிய படைப்புகளைக் கூட பயிரோவியங்களாக இவர்கள் உருவாக்கி திகைக்க வைத்துள்ளனர்.

கணினி காலம் வந்ததும் அதற்கேற்ப இக்கிராம மக்களும் மாறியுள்ளனர். கணிணி தொழில்நுட்ப உதவி மூலம் கச்சிதமாக, வேண்டிய அளவில் இந்த பயிர் உருவங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறு அனிமேஷன் உருவங்களைக்கூட பயிர்களை வைத்து படைக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் விடயமாக உள்ளது.

இந்த அதிசயங்களைக் காண ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனகாடேட் கிராமத்தை நோக்கி படையெடுக்கிறார்கள். இதனால் கிராமத்தின் வருமானமும் கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

உயிரோவியங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஜப்பானியரின் பயிரோவியங்களை காணுங்கள்.

No comments:

Post a Comment