Tuesday, June 22, 2010

உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளில் முதல் 10 பணக்கார வீரர்களின் பட்டியல்






ஆர்ஜன்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மேசி தற்போது பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார்.இவரது வருட வருமானம் 29.6 மில்லியன் பவுண்கள்.இவ்வருட உதைப்பந்தாட்ட போட்டிகளில் பணக்கார வீரர்களில் முதலிடம் பிடிக்கிறார்.16 வயதில் இருந்து மேசி பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார்.இவருக்கு சிறுவயதில் தசை சிதைவு நோய் இருந்தது. பார்சிலோனா அணி ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து மேசியை குழந்தை போல் பார்த்ததோடு உலகின் முன்னணி கால்பந்து வீரராகவும் ஆக்கியுள்ளது.


ரியல்மட்ரிட் அணிக்காக இவர் விளையாடி வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.இவரது ஆண்டு வருமானம் 27 மில்லியன் பவுண்கள் .இதற்கு முன் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ விளையாடி வந்தார்.இவரை மான்செஸ்டரில் இருந்து வாங்குதற்கு ரியல்மட்ரிட் 93 மில்லியன் பவுண்கள் செலவழித்தது.இவரது படம் பொறித்த ஜெர்சி விற்பனையால் மட்டும் 100 மில்லியன் பவுண் தொகையை ஒரே ஆண்டில் ரியல்மட்ரிட் சம்பாதித்தது அதுவும்.


பிரேசில் மிட்பீல்டர் காகாவின் ஆண்டு வருமானம் 16.9 மில்லியன் பவுண்கள். தனது வருமானத்தில் பெரும் பங்கினை அனாதை குழந்தைகளுக்கும், அறக்கட்டளைகளுக்கும் செலவழிப்பது காகாவின் குணம். ரியல் மட்ரிட் இவரது அணி. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 70 மில்லியன் டொலர் தொகைக்கு ஏ.சி.மிலானிடம் இருந்து ரியல் மட்ரிட் இவரை வாங்கியது. கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்ற பனியன் அணிவது இவருக்கு பிடிக்கும்.


தியரி ஹென்றி பார்சிலோனா அணிக்காக இவரும் விளையாடி வருகிறார்.இவரது ஆண்டு வருமானம் 16.1 மில்லியன் பவுண்கள்.சமீபத்தில் ஹைட்டியில் பூகம்பம் நடந்த போது பல மில்லியன் டொலர் தொகைக்கு மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார்.


தற்போது மான்செஸ்டர் சிட்டிக்காக ஆடி வரும் கார்லஸ் டாவெஸ் கோபக்கார மனிதர். இவரது ஆண்டு வருமானம் 13.1 மில்லியன் பவுண்கள்.மான்செஸ்டர் யுனைட்டில் இருந்து மான்செஸ்டர் சிட்டியில் இணைந்தவர்.அடங்கி போகமாட்டார்.ஆனால் நல்ல மனிதர்.மேசிக்கு அடுத்தார்போல் மரடேனா நம்பும் வீரர்.


பிராங்க் லம்பர்ட் இங்கிலாந்து அணியின் இதயம் போன்றவர் இந்த பிராங் லம்பர்ட். இவரது ஆண்டு வருமானம் 12.8 மில்லியன் பவுண்கள். செல்சி இவரது கிளப்.எந்த சர்ச்சையும் இவர் மீது கிடையாது .


சாமுவேல் ஈடோ கமரூன் அணித்தலைவர் சாமுவேல் ஈடோ இத்தாலியின் இன்டர்மிலான் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது ஆண்டு வருமானம் 12.4 மில்லியன் டொலர்கள். இந்த உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு கமருன் தகுதி பெற்றதையடுத்து சக வீரர்களுக்கு சாமுவேல் ஈடோ விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்கி பரிசளித்தார். இதற்காக மட்டும் இவர் செலவழித்த தொகை 1.2 மில்லியன் யு.எஸ்.டொலர்கள். தற்போது கமரூன் முதலாவது அணியாக போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜோன் டெர்ரி , செல்சி அணியின் தலைவர், ஆண்டு வருமானம் 10 மில்லியன் பவுண்கள்.இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு-. ஏழை குழந்தைகளை செல்சியின் பயிற்சி மைதானத்திற்குள் அழைத்து செல்ல லஞ்சம் வாங்கியதில் இருந்து சக வீரர் வயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னஸாவுடன் தொடர்பு வைத்தது வரை ஏராளமான குற்றச்சாட்டுகள் உண்டு.


ஸ்டீவன் ஜெரார்ட் இங்கிலாந்து மற்றும் புகழ்பெற்ற லிவர்பூல் அணியின் தலைவர் . இவரது ஆண்டு வருமானம் 9 மில்லியன் பவுண்கள். ரியல் மட்ரிட் ,இன்டர்மிலான் போன்ற அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய எதிர்பார்க்கின்றன. எனினும் ஜெரார்ட்க்கோ லிவர்பூல் மீது தனி காதல்.


சேவி அலான்சா ஸ்பெயின் மிட்பீல்டரான சேவி அலான்சா தற்போது பர்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.இவரது ஆண்டு வருமானம் 8.5 மில்லியன் பவுண்கள் ஆகும்.நல்ல கால்பந்தாட்டக்காரருக்குரிய அத்தனை குணமும் சேவியிடம் உண்டு.

No comments:

Post a Comment