பரீட்சையில் தேறி விட்டேன் என்றாலும்
இருந்தாலும் பழ்கலைக்கழகம் செல்ல தவறி விட்டேன்.
அப்போது என் தாயார் திட்டினார்
'வாழ்க்கையில் நீ அனுபவிக்க வேண்டிய இன்பத்தில்
பாதியை இழந்து விட்டாய்'.
அப்போது புரியவில்லை அந்தப் பாதியின் அா்த்தம்
காலம் என்ன என் அத்தை மகனா எனக்காக காத்திருக்க!
தான் நகா்ந்த பாதையில்
எனக்கான அந்தப்பாதி இன்பத்தின்
நுழைவாயிலை காட்டிச்சென்றது அந்தப் பாதி
இன்பத்தை முழுமையாக அனுபவித்து விட்டேன்
என்றாலும் ஏனோ எனக்குள்
இன்னும் இனம் புரியாத சோகம் காரணம்!
புரியவில்லை எனக்கூற நான் ஒன்றும்
காதல் சித்தாந்தம் எழுதவில்லை.
என்னை வளா்த்து விட்ட ஊடகவியல்.
ஒம் ஒம் அதனைத் தான் எழுதுகின்றேன்.
என்னாலும் நம்ப முடியவில்லை எப்போதும்
நகா்ந்து சென்ற காலம் இப்போது மட்டும்
தனது ஒட்டத்தை நிறுத்தவில்லை ஏனெனில்
காலம் எனது காதலனும் அல்ல
நான் அதனது முறைப்பொண்ணும் அல்ல.
பாதி இன்பத்தை காட்டித்தந்த அதே காலம்
இப்போது துன்பத்தின் வழியையும் காட்டித்தருகிறது
கடந்து சென்ற காலத்திற்க்கு நான் மட்டும்
விதிவிலக்கா என்ன?????????????????
தமது அடுத்த பாதி இன்பத்திற்கென காத்திருக்கும்
பலருள் நானும் ஒருத்தி.............
No comments:
Post a Comment