Sunday, August 23, 2009

ப்ரியங்கா

மாலை நேரம்
வெளியே போகாதேடி!
அப்பொழுதெல்லாம் இனம் புரியாமல்
சிவக்கும் என் அன்னையின் முகம்

பார்த்து சிரித்து கண் சிமிட்டி
செல்லும் என் குழந்தை தனம்-இன்று
வெளிச் சோடிக்கிடக்கிறது
தட்டிக்கேட்கவோ அதட்டிக் கொள்ளவோ-ஆளில்லை

தனிமையை உணருகின்றேன்
இன்னும் வாலிப வயதை அடையவில்லை
திணருகின்றேன்
உலகை வென்று விட்டேன்!

எந்நேரமும் பூரிக்கும் என்
ப்ரியங்காவுடன்..........
சிவந்திருக்கும் என் அன்னையின் முகத்தின்
காரணத்தை மழலை இவளில் காண்கிறேன்.

No comments:

Post a Comment