Wednesday, October 28, 2009

ஆண்டவன் மட்டும் விதிவிலக்கா என்ன?


நான் நானாக இருக்கும் வரை உன்னை நினைப்பதில்லை
என்றது ஏதோ உண்மை தான் - இருந்தும்
ஊமை மனது பித்தம் பிடித்து விட்டது போலும்
நான் நானாக இல்லாது நீயாக மாறி விட்டேன்
ஆதாலால் தான் கொடுத்த வாக்குறுதியை மீறியும்
உன்னை நினைக்கின்றேன் - என்றாலும்
பார்த்தாயா புரிந்து கொள்ள நீயும் இல்லை
புரிய வைக்க எனக்கும் வழியில்லை.
அனைவருக்கும் மனதினை மட்டும் ஊமையாய்
படைத்த இறைவன் எனக்கு மட்டும் ஏனோ
வாய்யையும் ஊமையாய் படைத்து விட்டான்
ஏங்கிய என் பழைய நாட்களின் அர்த்தம்
இன்று தான் எனக்குப் புரிகிறது.
இறைவனும் மனிதன் தானே அவன் மட்டும்
ஆசாபாசாங்களுக்கு விதி விலக்கா என்ன?
ஆதனால் தானோ என்னமோ தன்னை விட
ஆதிகமாய் வேறு எவரையும் அதிகமாய்
நேசிக்கக் கூடாது என்பதற்காய் - என்
வாயை கட்டிவிட்டான் போலும்.மனதில்
தான் என்னுகின்றேன் அவனை விட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன் என்பது மட்டும் அவனுக்குத்
தெரியாதிருந்தால் இன்று நானும் உன்னுள் ஒருத்தியாய்
வாழ்ந்திருப்பேன்!

1 comment:

  1. காதல் உணர்வு பிரவகித்து நிற்கிறதே எல்லாக் கவிதைகளிலும்... ம்ம்ம்.. பொருத்தமாகப் படங்கள் வேறு... வலைப்பதிவை திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நிறைய வாசகர்கள் வருவார்கள்...

    ReplyDelete