Thursday, January 21, 2010

சும்மா சும்மா!


படிப்பறிவு இல்லாதவர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக யுனெஸ்கோ தகவல் தெரிவிக்கிறது.

அவதார் படம் சீனாவில் தடை

அவதார் படத்தில் வெளி உலகத்தினரிடம் இருந்து தங்களது நிலத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க நவி படையினர், போராடுகின்றனர். அதே நிலைதான் தற்போது சீனாவில் நிலவி வருகிறதாம். தற்போது சீனர்கள் தங்கள் சொத்துக்களை அரசிடமிருந்தும், ரியல் எஸ்டேட் அதிபர்களிடமிருந்தும் காக்க போராடி வருகின்றனர்

04ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை
இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன். இவர் கேஸ்பர் என்ற 12வயது பூனையை வளர்த்து வந்தார். இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது. இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும். அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும். அப்போது அது இறங்கிக் கொள்ளும். கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும். வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும். நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது. சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது. இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது.

No comments:

Post a Comment