Thursday, January 21, 2010

தோழர்களிடமிருந்து!!!


உண்மைக்குக் கட்டுப்பட்டு - சத்தியத்துக்கு உடன்பட்டு வாழ்வது மிகப் பெரிய போராட்டம்தான். அதனால்தான் அதை 'சத்திய சோதனை' என்று வருணித்து எழுதினார் காந்தி.

அணி அணியாய்ச் செல்கின்றோம்.
அளப்பரும் கொடுமைகளை
களப்பலி காணுதற்கு
யாருமறியாப் பாதைகளில் யாம்
அணி அணியாய்ச் செல்கின்றோம்

உறை மூடிய வீணையில்
உயிர் நரம்பொன்றைத்
தட்டி எழுப்ப
மழைக்கால இரவொன்று வரலாம்.
காத்திரு.

மது பழக்கம் புகைப் பழக்கம்
இன்னோரென்ன
தொகைப் பழக்கமெல்லாம்
சொல்லிவிட்ட பின்தான்
நோய் நீக்கி, நோய் முதல் நீக்கி
வாழத் துடிக்கும் மனசு

தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

எனது கால்கள் தொய்ந்துவிட்டன. நுரையீரல்கள் ஓய்ந்து விட்டன. ஆனால் என் மனஉறுதி, எல்லாவற்றையும் சரிசெய்யும்.

அன்பு தாய், தந்தையே! உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத இந்தத் தறுதலைப் பிள்ளை உங்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறான். ஏற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment