Wednesday, May 12, 2010

உலக செவிலியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.



செவிலியர்கள் என அழைக்கப்படும் தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவு கூறும் வகையில் உலக செவிலியர் தினம் வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலக செவிலியர் அமைப்பு இந்த நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூறி வருகின்றது.

1953ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (னுழசழவால ளுரவாநசடயனெ) என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாக அறிவித்தார் எனினும், அந்த வேண்டுகோளானது நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்; நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூற முடிவு செய்யப்பட்டது.

அன்று தொடக்கம் வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி உலக வௌpலியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment