Friday, May 7, 2010

அன்புள்ள சுவாதி அன்னைக்கு சுவாதியின் அன்பு மடல்





உரு தெரியாத என் உடலுக்கு

உயிர் கொடுத்தவள்

என் உண்மைத் தாய் - நான்

உயிர் பிரிந்தாலும் என் உயிரை

சுமப்பவள் என் உரிமை தாய்



பத்து மாதம் சுமந்து என்னை

பாரில் அறிமுகப்படுத்தியவள் - என்

ஸ்பரிசத் தாய் - பத்து ஜென்மமானாலும்

சுவாசத்தை சுத்திகரிப்பவள் - என்

சுமங்களித் தாய்





நாட்கள் கடந்து போகும்

பாக்கள் பறந்து போகும்

நாக்கல் அடங்கி போகும்



கடக்காது பறக்காது அடங்காது – அவள்

மீது நான் கொண்ட காதல்..



சுவாசிக்க மறந்தாலும் சுவாதியை மறக்க

சிறிதளவும் நினைக்காதவள் - என்

சுவாதித் தாய் .... என்னை சுவாசித்தாள்

எனக்குள் யாசித்தாள் - என்னை

ப+சித்தாள் - இருந்து நேசிக்கிறாள்

மனத்திரையில் என் மனைவியாய்

என் மரணத்தின் அர்த்தத்தாய்...




இருண்ட உலகத்தில்

புறண்டு படுத்திருந்த – எனக்கு

அருள் கொடுத்து இருள் அகற்றி

ஒளி கொடுத்தவள் என் அன்னை...



வேர் கொண்ட மரம்கூட

நீரின்றேல் மாய்ந்துவிடும் - உன்

உயிர் கொண்டதால் - என்

ஜீவன் நீரின்றியும் ஜீவித்திருக்கும்...



பார் மீது நான் விழுந்த

ஓர் காட்சியை ஊர் பார்த்து

யாரோ ... எவனோ என்று முனுமுனுக்க...



பார் ஆள வந்தவன்தான்

ஊர் ஆளும் நாயகன்தான்

தேரில் ஏறி வாரான் ஊருக்கு

சேதி சொல்ல என்று மார் தட்டி

நீ மகிழ.. பால் குடித்த பருவத்தை

நான் உணர்கிறேன் என் அம்மா...



அம்மா நீ என்னை ஈன்றபோது

பட்ட கஷ்டங்களை – நான்
என்ன கடன் செய்து ஈடுசெய்வேன்...

No comments:

Post a Comment