இனி
உன்னை நினைப்பதில்லை
என்ற போது தான்
நிலையற்ற-என் வாழ்க்கையின்
நிர்ப்பந்தத்தை உணா்ந்தேன்
உறவிற்காக
காதலித்த உன்னை
உலகறியச் செய்த போது
முதன் முறை தோற்றுப்போனேன்
உன்னிடமல்ல
என் வாழ்க்கையிடம்-என்றாலும்
தேறிவிட்டேன்
வாழ்க்கையிடமல்ல உன்னிடம் மட்டும்
உனக்கான
புதியதொரு உறவு
உன் அருகாமையில்
மறு முறை தோற்றுப் போனேன்
உன்னிடமல்ல
என் வாழ்க்கையிடம்-இருப்பினும்
தேறிவிட்டேன்
வாழ்க்கையிடமல்ல உன்னிடம் மட்டும்
உனக்கான புதியதொரு உறவினை
சுமந்த போது-புரிந்து கொண்டேன்
என்-முழுமையான தோழ்வியினை
அர்த்தமில்லாமல் சான் கொண்ட பெருமிதம்
பெற்ற வெற்றிகள் எல்லாம்
அவனிடம் தான் என்றாலும்
தோற்றதுஎதுவோ என்
வாழ்க்கையிடம் தானே!
No comments:
Post a Comment