Sunday, August 23, 2009

உன்மையில்லா உறவு நீ

சமுகம்!
என்னைப் பழித்த போது புரியாத-என்
வாழ்க்கையின் நிசப்தங்கள் அன்பே
பிள்ளை நீ என்னைப் பழித்த போது
உயிரை உலுக்கி விட்டாயடா
அத்தனையும் உனக்காகத்தான்
ஆதங்கப்படவில்லையடா....

விலைமாது
சமூகம் எனக்குக் கொடுத்த பட்டம்
ஏற்றுக்கொண்டேன்
அநாதரவாகத் தெருவோரச் சிறுவனாக
அல்லாமல் எனக்கான உறவாக- உன்னை
புதுப்பித்துக்கொண்டதால்!
உணா்த்தி விட்டாயடா உறவுகள்
அனைத்தும் உண்மையில்லா
உன்னைப் போலென்று..............

No comments:

Post a Comment