Friday, May 7, 2010
அன்புள்ள அம்மாவுக்கு !
உவமைக்கு உருவம்
கொடுக்க முயற்சிக்கும்
உருவகம்
அன்னை இவள் !
மெய்ஞான பரம் பொருளை
உயிர்ப்பிக்கும் விஞ்ஞானம்
உயிர்களின் உறைவிடமும்
உறைவிடத்தின் இருப்பிடமும்
நீ... நீ மட்டும் தான்
உயிரோடு போகும் வலியை
வயிரோடு சுமந்த
தாரகை நீ
உயிர் என்ற
கனவிற்கும் கற்பனைக்கும்
விளக்கம் கொடுக்கும்
விடை அன்னை
தாயின் உறைவிடமும்
தந்தையின் இருப்பிடமும்
உறவுகளின் உண்மையும்
இவள் அன்னை
உறவுகளின் உயிராய்
பிரிவுகளின் நிழலாய்
வரும் தொலைதூர
சொந்தம் என் அன்னை
பெண்மைக்கு!
தனித்துவம் தந்த
மென்மை இவள்
அன்னை
பெண்மையின் மென்மைக்கு
தனித்துவம் தந்தவள்
அன்னை இவள்
கருவோடும் உயிரோடும்
போராடும் வாழ்க்கையின்
எல்லை இவள், என் அன்னை
சுவாதி jeni சந்திரன்,
i love you mum
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment